அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை..வானிலை ஆய்வு மையம் தகவல்!
Southwest monsoon in the next 5 days Weather Research Center information
அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 சென்டிமீட்டரும், அரக்கோணம், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, தர்மபுரி, தேன்கனிக்கோட்டையில் தலா 6 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
English Summary
Southwest monsoon in the next 5 days Weather Research Center information