அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
21 05 2025 today gold and silvar price
நாளுக்கு நாள் தங்கம் விலை பல்வேறு மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்தபடி உள்ளனர். தங்கம் ஏழை, எளிய மக்களின் முதலீடுகளில் ஒன்றாக உள்ளதால் பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது.
அதனால் அவர்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு 220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் 111 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 111000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
21 05 2025 today gold and silvar price