மத்திய அரசு செய்யும் சதிக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...! - உச்ச நீதிமன்றத்தில் கல்வி நிதி வழக்கு
Tamil Nadu government has put an end conspiracy central government Education Fund Case Supreme Court
தமிழ்நாடு மாநிலத்திற்கு, மத்திய அரசு கல்வி நிதியை கொடுக்காமல் நீண்ட காலமாக பல வித கருத்துக்களை முன்வைத்து வருகிறது.இதற்கு கட்சி கூட்டணி, மாநிலம் தனித்து நிற்பது,மத்திய அரசு கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காதது என்று இன்னும் பல காரணங்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.
மனு:
அந்த மனுவில் குறிப்பிட்டதாவது," புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு தெரிவிப்பது சட்டவிரோதம்" என்று தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாகவே, பல காட்சிகள் இது பற்றி எடுத்துரைத்தும்,தமிழ்நாடு அரசு தற்போதுதான் இம்முடிவை எடுத்துள்ளது.
English Summary
Tamil Nadu government has put an end conspiracy central government Education Fund Case Supreme Court