43 மாணவிகளுக்கு மதிப்பெண் மறுமதிப்பீடு..MLA சம்பத் கோரிக்கை!
Re evaluation of marks for 43 female students MLA Sampaths request
அறிவியல் பாடத்தில் 43 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் மறுமதிப்பீடு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு . சம்பத் கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு திடீரென சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் முடிவை எடுத்தது. முதலியார்பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவிகள் தேர்வு எழுதினார்.
இதில் அறிவியல் பாடத்தில் மட்டும் 43 மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் நடத்த ஆசிரியர் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக இந்த அறிவியல் பாடத்தில் மட்டும் 43 மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் அனைவரும் மற்ற பாடங்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள்.
எனவே இவர்கள் அறிவியலில் குறைந்த மதிப்பெண் பெற்றது வருத்தமாகவும் சந்தேகத்திற்கு உள்ளான வகையில் உள்ளது. எனவே இவர்களுக்கு மறு மதிப்பீடு செய்ய உடனடியாக ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட 43 மாணவிகளுக்கு மறுமதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என சட்டமன்ற உறுப்பினர் திரு . சம்பத் கோரிக்கைவிடுத்தார்.
English Summary
Re evaluation of marks for 43 female students MLA Sampaths request