பல்கலைகழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Power to appoint university vice chancellors High Court orders interim stay
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்தவர் அரசின் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும், விடுமுறைக்கால அமர்வில் இதனை அவசர வழக்காக மாலை 06 மணி வரை விசாரிப்பதில் அவசியம் என்ன? என்று வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்ற செயல் என்றும், இது நியாயமானதாக இல்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Power to appoint university vice chancellors High Court orders interim stay