திருச்செந்தூர் குடமுழுக்கு நேர மாற்றம் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவு..! - Seithipunal
Seithipunal


 திருச்செந்தூர் கோவிலில் 07.07.2025-இல் காலை 09 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறு வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மூர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் திருச்செந்தூர் கோவிலில் 07.07.2025-இல் காலை 9 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடமுழுக்கு நடைபெற குறிக்கப்பட்டுள்ள நேரம், வேதங்கள், சாஸ்திரங்கள், கோவிலில் பின்பற்றப்படும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த உகந்த நேரம் அல்ல என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே குடமுழுக்கை பகல் 12.05 முதல் 12.45-க்குள் நடத்த உத்தரவிடக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்துடன், குறித்த நேரத்தில் குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டுமென சிவராம சுப்பிரமணிய சாஸ்திரியும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுதாக்கல் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதன் போது அப்போது 03 வித நேரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலின் மேல்சாந்தி, திருச்செந்தூர் கோவில் ஸ்தானிகர், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் கோவில் ராஜா குருக்கள் மற்றும் மனுதாரர் ஆகியோர் இணைந்து திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai court orders to consider and decide on changing the timings of Tiruchendur Kudamuzukku


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->