இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும்..செல்வப்பெருந்தகை சொல்கிறார்!
India should further strengthen the alliance says the great wealth
பா.ஜ.க. கீழ்மட்ட நிலையில் இருந்து மேல்மட்ட நிலை வரை அனைத்தையும் கைப்பற்றி வைத்துள்ளது. எங்கள் தலைவர்கள் யாரும் பா.ஜ.க.வை உயர்த்திப்பிடிக்கும் தலைவர்கள் கிடையாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கூறினார். இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை கூறுகையில்,
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்யும். கார்த்தி சிதம்பரம் அவரின் ஆசையை கூறியுள்ளார். இது கட்சியின் கருத்து அல்ல. கட்சி முடிவெடுக்கும்.இந்த நாட்டை அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது பா.ஜ.க. அது பாசீச ஆட்சி நடத்துகிறது'
இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும். பா.ஜ.க. கீழ்மட்ட நிலையில் இருந்து மேல்மட்ட நிலை வரை அனைத்தையும் கைப்பற்றி வைத்துள்ளது. எங்கள் தலைவர்கள் யாரும் பா.ஜ.க.வை உயர்த்திப்பிடிக்கும் தலைவர்கள் கிடையாது என்றார்.
English Summary
India should further strengthen the alliance says the great wealth