பாகிஸ்தானுக்கு உளவு..பெண் யூடியூபரிடம் என்.ஐ.ஏ. விசாரணை!
Espionage to Pakistan Inquiry by NIA with the female YouTuber
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டை காட்டிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்புலமாக இருந்தது பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இது தொடர்பாக ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டை காட்டிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதேபோல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலத்தில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைதான 11 பேருக்கும் யூடியூபர் ஜோதியே தலைவிபோல் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜோதியிடம் என்.ஐ.ஏ., இந்தியாவின் உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் கைது செய்யப்பட்ட சிலரிடமும் உளவுப்பிரிவு, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Espionage to Pakistan Inquiry by NIA with the female YouTuber