கொரோனா தொற்று குறித்து யாவரும் அச்சப்பட வேண்டாம்..சுகாதாரத்துறை அறிவுருத்தல்.! - Seithipunal
Seithipunal


தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் கூரியுள்ளார்.

இதுகுறித்து  புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறையின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் அனைத்து ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது. இதுவரை கொரோனா தொற்று கடந்த வாரத்தில் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தகுந்த சிகிச்சை மற்றும் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி அறிவுரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் என்பது மற்ற சுவாச வைரஸ் போன்றது, கடந்த காலத்தில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றின் அறிகுறிகளான ஜலதொஷம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏதேனும் இருப்பின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அரசு. புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், ILI & SARI போன்ற சுவாச நோய்த்தொற்றுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை, குடிமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும். தொற்று பரவாமல் தடுக்கவும் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது. 

செய்ய வேண்டியவை:

நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும்.
சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்

நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்

உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களை விட்டு விலகி இருங்கள்.

நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள பரிந்துரைக்கப்படுகிறது இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை  நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் மற்றவர்களுடன்
தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்

நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும்

செய்யக்கூடாதவை.

டிஷ்யூ பேப்பர் & கை குட்டை (கர்சீஃப்) மீண்டும் மறுபயன்பாடு செய்யாதீர்கள்

நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு துண்டுகள், கைத்தறி போன்றவற்றைப் பகிர்தல். அவர்கள் பயன்படுத்திய

கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது

பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்து எடுக்க வேண்டாம்.

புதுச்சேரியில் தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நபர்களை சிகிச்சை செய்வதற்கு புதுச்சேரி அரசு பொது மருத்துவமணை, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி, புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமணை ஆகிய இடங்களில் நான்கு படுக்கைகள் பிரோத்தியமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் மற்றும் பிராணவாவு வசதிகளோடு புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள மார்பு நோய் மருத்துவமணையில் பிரோத்தியமாக 6 (ஆறு) படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை மற்றும்.. புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் NCDC, MOH&FW, GOI புது தில்லி உடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.எனவே பொதுமக்கள் யாவரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Everyone should not be afraid of the coronavirus infectionHealth department advises


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->