இட ஒதுக்கீடு விவகாரம்..மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சபாநாயகர் செல்வம்!
Regarding the seat allocation issue Speaker Selvam met with the Union Minister of Education and presented a request
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சபாநாயகர் செல்வம் சந்தித்து புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் வழங்கினார்.
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சபாநாயகர் செல்வம் சந்தித்தார் .இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 1985 ஆம் துவக்கப்பட்ட போது இருந்த பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் வழங்கினார். மத்திய கல்வித்துறை அமைச்சரும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
English Summary
Regarding the seat allocation issue Speaker Selvam met with the Union Minister of Education and presented a request