தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?
Benefits of orange fruit
ஆரஞ்சு பழத்தில் தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி6, பந்தோதெனிக் அமிலம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனிசு, செலினியம் மற்றும் தாமிரம் ஆகிய ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய நார் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால் அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. மேலும் பொட்டாசியம் எனும் கனிமசத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக வைக்க உதவுகிறது.
அதேபோல் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள செல்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் தாக்காதவாறு பாதுகாக்கிறது.

அதேபோல் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதால் ரத்த அழுத்தமானது குறையும். அதன்படி ஆரஞ்சு பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சூரிய கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் முதுமை தோற்றத்தையும் தடுக்கிறது.
ஆரஞ்சு பழம் குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழமாகும். ஏனென்றால் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் விந்து அணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் பற்கள் வலிமையாக இருக்கும்.