இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் ஆரஞ்சு பழத்தின் அற்புத நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


மக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக இருப்பது ஆரஞ்சு பழம். இதில் நீர் சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கலோரிகள், நார்சத்து, வைட்டமின், கால்சியம், பொட்டாசியம் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் ஆரஞ்சு பழத்தில் நியாசின், கியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளது.

இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது அதன் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆரஞ்சு பழம் பொதுவாக சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுவதோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆரஞ்சு பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் என பல நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of orange fruit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->