வயிற்றில் உள்ள பூச்சியை நீக்க வேண்டுமா.? இந்த கீரையை ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


மணலைக்கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகள் ஒன்று. இதனை மணல் கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை தண்டு என அனைத்தும் மருத்துவ நன்மைகளைக் கொண்டது. நம்முடைய முன்னோர்களின் மருத்துவ கீரைகளில் மணலிக்கீரையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனம் அடைந்து காணப்படுகின்றனர். இதற்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் தான் காரணம் இந்த வயிற்று பூச்சிகளை எளிதாக வெளியேற்ற மணலி கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் கலந்து இருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மார்பு சளியை போக்க மணலி கீரையுடன், சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி நீங்கும். மேலும் மணலிக்கீரையை பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குணமாகும்.

மனிதர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதற்கு காரணம் பித்த அதிகரிப்பு. இந்த குறையை போக்க மணலிக்கீரையை சாப்பிடுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலைக் கீரையை செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு வலுபெறும். இதனால் மனதளவில் வலுவானவர்களா இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Manali keerai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->