பச்சை பயறு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள்?
benefits of green dal
* பச்சை பயிரில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் பசி ஹார்மோன்களை குறைத்து அதிகப்படியான கலோரி உட்கொள்வதை தடுப்பதனால் எடை இழப்பை ஆதரிக்கும்.
* பச்சை பயிரில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
* பச்சை பயிரில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி ஒட்டுமொத்த செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
* பச்சை பயிரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து, கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்களை தடுக்கிறது.
* பச்சை பயிறு உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பினால் ஏற்படும் ரத்த சோகைக்கு பச்சைப்பயிறு ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது.