வெறும் கறிவேப்பிலையில் இவ்வளவு பயன்களா? தெரிஞ்சா இனி கண்டிப்பா தூக்கி வீசமாட்டீங்க..!
benefits of curry leaves
உணவில் வாசனைக்காகவும், சுவைக்காவும் சேர்க்கப்படும் கருவேப்பிலையை நாம் யாரும் பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை. தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் இதில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் இனிமேல் இவ்வாறு செய்யாமல் சாப்பிட்டுவிடுவோம்.
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையை சரி செய்கிறது.

கறிவேப்பிலையை தினமும் பச்சையாக உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும் .மேலும் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி, தொப்பையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.

மேலும் நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் , அதிகாலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும், மேலும் முற்றிலுமாகக் குணம் பெறவும் கறிவேப்பிலைஉதவுகிறது. இதனால் கறிவேப்பிலை இலைகளை அதிகம் உண்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சளி தொல்லை உள்ளவர்கள் கருவேப்பிலையை காயவைத்து பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெறலாம்.

கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கல்லீரல்களில் தங்கி இருக்கும் தீங்கு விளைவிக்க கூடிய நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.