தேங்காய் பால் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?..!
Benefits of Coconut Milk or Thengai Pal Health Tips
தேங்காய் அதிகளவு உபயோகம் செய்தால் மாரடைப்பு பிரச்சனை ஏற்படும் என்று, பலரும் உடலுக்கு தேவையான அளவு கூட உபயோகம் செய்யாமல் இருந்து வருகின்றனர். பச்சை தேங்காயை உடைத்து அரைமணி நேரத்திற்குள் சாப்பிட்டால் சகல நோய்களையும் அது குணப்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது.
பச்சை தேங்காயை உடைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மை கிடைக்கும். பச்சை தேங்காயை பொறுத்த வரையில் அதிகளவு கொழுப்பு இருக்கிறது என்றாலும், சமையல் செய்யும் போதுதான் அந்த கொழுப்பு வெளிப்படுகிறது. இதனால் தான் பச்சை தேங்காயை அப்படியே சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

பச்சை தேங்காயை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் அழுக்குகள் நீங்கும். நமது உடல் இரத்தத்தினை சுத்தப்படுத்தும். உடலை பாதுகாக்கும். உச்சி முதல் பாதம் வரை உடல் உறுப்புகளை பாதுகாக்கும்.
தேங்காய்க்கும் - மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை உள்ளது. அன்னை வயிற்றில் 10 மாதம் நாம் கருவாகி உருவாகுவதை போல, தேங்காயும் நமக்கு கிடைக்க 10 மாதங்கள் ஆகும். பச்சை தேங்காயை அப்படியே சாப்பிட்டால் நல்ல கொழுப்புகள் நமது உடலை பராமரிக்கிறது.

அன்றைய காலங்களில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய் பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய நிலையில், தற்போது மாட்டுப்பால் ஊற்றி கதையை முடித்துவிடுகிறார்கள். தாய்ப்பாலுக்கு மாற்றாக தேங்காய் பாலையும் கொடுத்து வந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Coconut Milk or Thengai Pal Health Tips