'ஒருதலைபட்சத் தடைகள், சட்டவிரோதமானவை; அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலால் இந்தியா உடனான உறவு பலவீனப்படாது'. ரஷ்ய தூதர் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார தடைகளால் இந்தியா உடனான எங்களது உறவை பலவீனப்படுத்தாது என  இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்த்துள்ளார்.

இது குறித்து அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள், தடைகளைப் பொறுத்தவரை, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அத்துடன், போட்டித் தடைகள் என்ற இந்த சட்டவிரோத கருவியை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம் என்றும், ஒருதலைபட்சத் தடைகள், சட்டவிரோதமானவை என்று கூறியுள்ளார்.

ஆனாலும், ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், எங்களின்வளர்ச்சி மேலும் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே,  ரஷ்யாவுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு எரிசக்தி உட்பட அனைத்து துறைகளிலும் ரஷ்யாவின் கூட்டாண்மையை விரிவுபடுத்த அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் புடினின் இந்திய பயணம் முக்கியமானதாக இருக்கும் என்றும், ஆகையால் உறவுகளின் போக்கைப் பற்றி நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய சூழ்நிலைகள் காரணமாக ஒரு சிறிய இடையூறு ஏற்பட்டாலும், அதைச் சமாளிப்பதற்கான வழிகளை நாங்கள் நிச்சயமாகக் கண்டுபிடிப்போம் என்றும் ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US tariff threat will not weaken ties with India says Russian Ambassador


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->