வறுமையின் கோரப்பிடி: ரயில் முன்பு பாய்ந்து மூன்று பெண்கள் தற்கொலை : கதிகலங்கி போயுள்ள விருதுநகர்..!
Three women commit suicide by jumping in front of a train in Virudhunagar
விருதுநகர் அருகே தாய் ஒருவர் தனது இரண்டும் மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்த 60 வயதான ராஜவள்ளி, இவருக்கு உப்புச்சத்து அதிகரித்து சிறுநீரக குறைபாடு இருந்து வந்துள்ளது. இவரின் கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 30 வயதில் மாரியம்மாள் என்ற பெண்ணும், 27 வயதில் முத்துமாரி, 25 வயதில் முத்துப்பேச்சி என மூன்று மகள்கள். தாய் ராஜவள்ளி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தந்தை மற்றும் மகள்கள் மூவரும் கூலித் தொழில் செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்தனர். அத்துடன், மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 05.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்ட்டுள்ளது.
கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. தர்மர் உடல்களை அடையாளம் கண்ட நிலையில், துாத்துக்குடி ரயில்வே போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Three women commit suicide by jumping in front of a train in Virudhunagar