டிப்ஸ்... டிப்ஸ்... சமையலில் இதை மட்டும் செய்யுங்கள் சுவை அள்ளும்.!! - Seithipunal
Seithipunal


என்னதான் சமையல் செய்தாலும் அதில் சில பொருட்களை சேர்ப்பதால் சாப்பாடு சுவை மேலும் அதிகரிக்கும். அப்படி சில டிப்ஸ்களை இஞ்சுக்கு காண்போம்.

*சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

* பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

* வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

* முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

* கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

* இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

* மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

* புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

* முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ten samaiyal tips


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->