கர்ப்பப்பையை பாதுகாக்கும் வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்.!
Benefits of banana flower
வாழை மரத்தில் உள்ள பூ, காய், பழம், தண்டு என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. இதில் வாழைப்பூவை வைத்து வாழைப்பூ பொரியல், வடை, சூப் போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் குறிப்பாக வாழைப்பூ அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. அந்த வகையில் வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் வாழைப்பூவில் உள்ள நார் சத்து மற்றும் இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
ரத்த மூலநோய் உள்ளவர்கள் வாழைப்பூவை இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் விரைவில் குணமாகும்.
வாழைப்பூ சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும்.
வாழைப்பூ கர்ப்ப பை பிரச்சினைகளை குறைத்து பாதுகாக்கிறது. மேலும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
English Summary
Benefits of banana flower