காலையில் எழுந்ததும் அருகம்புல் சாறு குடித்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.!
Benefits of Arugampul Juice or Bermuda grass Health Tips Tamil
நமது ஊர்களில் பெரும்பாலான பகுதிகளில் எளிதாக காணப்படும் அருகம்புல், தண்டு மெலிதாகவும் ஊசி போலவும் வளரும். அருகம்புல்லில் நிறைந்திருக்கும் பச்சையம், இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகித்து வருகிறது.
அருகம்புல்லில் இருக்கும் காரத்தன்மை, உயிர்சத்து, தாது உப்புகள் உடலின் தளர்ச்சியை நீக்கி, வலிமையை ஏற்படுத்துகிறது. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை சமப்படுத்தி, குடல் புண்ணை குணப்படுத்துகிறது.

இரத்தத்தை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. இரத்தத்தின் வெள்ளை அணுக்களை தூண்டி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. இதயம் மற்றும் நுரையீரல், சிறுநீரக செயல்பாடுகளுக்கு துணை செய்கிறது. கல்லீரலில் கற்கள் ஏற்படும் பிரச்சனையை சரி செய்கிறது.
பற்களில் உள்ள ஈறு பகுதியில் ஏற்படும் இரத்தக்கசிவு பிரச்சனையை சரி செய்து, பற்களை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. நச்சுப்பொருட்களால் ஏற்படும் புற்றுநோயினை தடுக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. அருகம்புல்லில் இருக்கும் இன்சுலின் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. நாளமில்லா சுரப்பிகளை சீர்படுத்தி, ஆஸ்துமா நோயில் இருந்து விடுதலை செய்கிறது.

அதிகளவு உள்ள உடல் வெப்பத்தை தனித்து, குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து, உடலின் நலத்தை மேம்படுத்துகிறது. தோல் நோய் மற்றும் சோற்றுப்புண் போன்றவருக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. அனைத்துவிதமான நச்சுக்கிருமிகளை நீக்க அருகம்புல் உதவி செய்கிறது.
காலை வேளைகளில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால், நமது உடலில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படவுள்ள பல்வேறு நோய்கள் சரியாகும். அருகம்புல் சாறினை குடித்த 2 மணிநேரம் கழித்து, பிற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த நாள அடைப்பு இருக்கும் நபர்கள் அருகம்புல் சாறை பாலில் சேர்த்து குடித்து வர, இரத்த நாள அடைப்பு சரியாகும். அருகம்புல் சாறுடன் மஞ்சள் சேர்த்து உடலில் பூசி குளித்து வர சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளும் சரியாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Arugampul Juice or Bermuda grass Health Tips Tamil