ஆஸ்துமா...? கவலை வேண்டாம்... இந்த உடற்பேணல் வழிகள் உங்களுக்காக....! - Seithipunal
Seithipunal


ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள் : 
ஆஸ்துமா நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சில உடற்பேணற் முறைகளையும் கையாள வேண்டும்.
உடலுக்குக் குளர்ச்சி தரும் தைல வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது.
வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை அறவே விட்டுவிட வேண்டும்.


வாசனை ஊதுபத்திகள், வாசனை தரும் சோப்புகள், வாசனை தரும் மலர்கள் ஆகியவற்றின் உபயோகத்தினை குறைத்துவிட வேண்டும்.
தலைமுடிக்கு சாயமிடுபவர்கள் முற்றிலுமாக அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும். 
முகப்பூச்சு கிரீம்கள், வாசனை மிக்க சேவிங் லோசர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தலைக்கு குளித்த அன்று கண்டிப்பாக பத்தியம் காக்க வேண்டும். மந்தமான உணவுகளையும் வாயுவை மிகுதிப்படுத்தும் உணவு வகைகளையும் அறவே நீக்க வேண்டும்.


ஆஸ்துமா நோய் வந்தபின் காக்கும் முறைகள் : 
மருத்துவர் அறிவுரையோடு இன்ஹேலர் தெரப்பி மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.
ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
சிகரெட் பிடிக்கவும் கூடாது; சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asthma Dont worry these fitness tips are for you


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->