அதிமுக தான்.. விடாமல் முரண்டு பிடிக்கும் சசிகலா.! முக்கிய புள்ளியிடம் வலைவிரிப்பு.! - Seithipunal
Seithipunal


சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று தற்போது தண்டனை காலம் முடிந்து தமிழகம் திரும்பியுள்ளார். அவரது வருகை தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளியானதிலிருந்து சசிகலா அமைதியாக இருந்து வருகிறார். 

இந்த அமைதிக்கு பின்னர் பல்வேறு திட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவை கைப்பற்றுவதுதான் அவரது நோக்கம். அதற்காக தான் சசிகலா தீவிரமாக முயற்சித்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

எனவே, அதிமுகவில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளுடன் சேர்ந்து திரைமறைவில் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி சசிகலாவை எக்காரணத்தைக் கொண்டும் அதிமுகவில் இணைத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அத்துடன் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்று மோடி தமிழகம் வந்தபோது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதற்கு மோடியும் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சசிகலா தரப்பினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தாங்களே பார்த்துக் கொள்வதாகவும், 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் சசிகலா பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 

இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லையாம். ஆனால், இறுதி நேரத்தில் கூட்டணி அமைக்கப் படும் என்று கூறப்படுகிறது. கூட்டணி பங்கீடு குறித்து பாஜக பேச வந்த பொழுது சசிகலா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று எடப்பாடி முன்னதாகவே கட்டளையிட்டுள்ளார். எனவே, இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா அதிமுக கூட்டணியில் இணைவாரா இல்லையா என்பது தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala master plan by using bjp


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->