சசிகலா -சீமான் சந்திப்பு விவகாரம்: வெளியாவுள்ள தடாலடி அறிவிப்பு.! எடப்பாடிக்கு பகீர்.!  - Seithipunal
Seithipunal


சீமான் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், சசிகலாவை அவர் சந்தித்து இருக்கிறார். 

சிறையில் இருந்து சசிகலா வெளியானது முதல் அவர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டது. ஆனால், அமைதியான நிலையிலேயே அவர் இருக்கின்றார். தற்போது முதன்முதலாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்று தெரிவிக்கின்றனர். மேலும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் என்று சசிகலாவை சந்தித்தார். அவரை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்து இருக்கிறார். 

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் தேர்தல் வர இருப்பதால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமல்ல, என்கிறது நெருங்கிய வட்டாரங்கள். இரு தரப்புமே கூட்டணி குறித்து கமுக்கமாக தங்களுக்குள் பேசிக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் உறுதியான கூட்டணியை அறிவித்து எந்த தொகுதி எத்தனை சீட் என்பதை முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

முக்கிய புள்ளி உடன் சசிகலா தீவிர ஆலோசனை.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! -  Seithipunal

அதிமுக மற்றும் திமுகவில் தற்போது தொகுதி மற்றும் சீட் பேரங்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தங்களுக்கு தேவையான தொகுதிகள் மற்றும் சீட்டுகள் கிடைக்கவில்லை, எனும் பட்சத்தில் மூன்றாவது அணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த மூன்றாவது அணி சசிகலா தலைமையில் உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

சிறையில் இருந்து சசிகலா வெளிவந்தவுடன் அமமுகவை பலப்படுத்துவாரா அல்லது அதிமுகவுடன் கை கோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து எதுவும் தற்போது சசிகலா பேசவில்லை. ஆனால், அதற்குள் அமமுக பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுக்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நாம்தமிழர்கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் இணைந்து 3-வது அணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது.

30 வருடம் அரசியலில் இருக்கிறேன்.. என்னை மீறி ஏதும் நடந்திடுமா?.. வருகைக்கு  முன்னரே ஆட்பறிப்பு..! - Seithipunal

இந்த அணியில் மேலும் ஒரு சில ஜாதி சங்கங்களும், இஸ்லாம் அமைப்புகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நாம் தமிழர் கட்சி மற்றும் அமமுக இரண்டுமே குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ள வலுவான கட்சியாகும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை வெற்றி பெற பெறுவதைவிட அதிமுகவை அதிமுகவின் வாக்கு வங்கியில் சேதத்தை ஏற்படுத்துவது தான் நோக்கம் என்று கூறப்படுகிறது. 

பாஜகவும் தொகுதி பேரம் பேசி எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் அதிமுகவிலிருந்து விலகலாம் என்றும், எனவே இந்த கூட்டணி பாஜக தலைமையில் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மூன்றாவது அணி ஏற்படுவது குறித்து முன்னதாகவே எடப்பாடி கணித்து இருக்கிறார். இந்த புதிய கூட்டணியை தவிடுபொடியாக்க பிரத்தியேக ஆயுதம் ஒன்றை அவர் தகுந்த நேரத்தில் கையில் எடுப்பார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் இத்தகைய திடீர் சந்திப்புகள் இனி அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SASIKALA AND SEEMAN MEET REFLECTION


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->