நாம் கண்ட கனவுகளும், அதன் பலன்களும்!
நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும்!
1) அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
2) மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி நாடாகும்.
3) அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் உண்டாகும்.
4) அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு உண்டாகும்.
5) அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
6) ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு உண்டாகும்.
7) அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும்.
8) அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உண்டாகும்.
9) அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
10) அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.