விநாயகர் சதுர்த்தி அன்று இந்த '5' தவறுகளை மறந்தும் கூட செய்யாதீங்க! பெரும் கஷ்டங்கள் வந்து சேரும்! 
                                    
                                    
                                   Donot forget or even make these 5 mistakes on Vinayagar Chaturthi You will face great difficulties
 
                                 
                               
                                
                                      
                                            இந்துக்களில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 27, புதன்கிழமை அன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நாளை நினைவுகூர்வதே இந்த சதுர்த்தி.
கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறுவதுடன், வீடுகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கமாகும். அதேசமயம் பொதுத்தளங்களிலும் விநாயகர் சிலை நிறுவி மக்களால் ஆராதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளில் சிலையை வைத்து வழிபடும் போது செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
செய்ய வேண்டியவை
எந்த விதமான சிலையைக் கொண்டு வழிபட்டாலும், விநாயகர் தலையில் கிரீடம் மற்றும் குடை இருக்க வேண்டும். இவை இல்லையெனில் பலன்கள் முழுமை பெறாது.
உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது நல்லது.
விநாயகர் சிலையுடன் அவரது வாகனம் (மூஷிகம்) மற்றும் அவருக்குப் பிரியமான மோதகம் வைத்தே வழிபட வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
விநாயகருக்கு சிறப்பு நிற ஆடை அணிவித்து பூஜை செய்வது நல்ல பலன்களை தரும்.
வீட்டில் விநாயகர் சிலையை கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வழிபட வேண்டும்.
விநாயகருக்கான பாடல்களைப் பாடி, மணி ஓசை எழுப்பி வழிபட்டால் வீட்டிற்கு பல நன்மைகள் வந்து சேரும்.
செய்யக் கூடாதவை
வீட்டில் வைக்கும் விநாயகர் சிலையின் தும்பிக்கையானது வலது புறம் நோக்கி இருக்கக் கூடாது. அது இடப்புறம் நோக்கி தான் இருக்க வேண்டும்.
வெறும் கற்பூரம் காட்டி விட்டு பூஜை செய்யாமல் சிலையை நேரில் கரைக்கக் கூடாது.விநாயகர் சிலை வீட்டில் இருந்தால், பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளை தவிர்த்து, சாத்வீக உணவு மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும்.
விநாயகர் சிலையை தனியாக வைக்கக் கூடாது; லட்சுமி தேவி, சிவபெருமான், பார்வதி, முருகன் போன்ற தெய்வங்களின் சிலைகளுடன் சேர்த்து வைக்க வேண்டும்.
விநாயகர் சிலை வீட்டில் இருந்தால், சதுர்த்தி நாளில் மட்டும் அல்லாமல் தினமும் நைவேத்தியம் படைத்து வழிபடுவது அவசியம்.
 இவ்வாறு விநாயகர் சதுர்த்தி நாளில் சரியான முறையில் பூஜை செய்வது, வீடு மற்றும் குடும்பத்திற்கு வளமும் அமைதியும் தரும் என நம்பப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Donot forget or even make these 5 mistakes on Vinayagar Chaturthi You will face great difficulties