முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக?.. அதிமுக - அமமுக வட்டாரங்களில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


அமமுகவையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று பாஜக மறைமுகமாக அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் அமமுகவை மொத்தமாக பாஜகவில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் மறைமுக பதற்றம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.

தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தலில் களம்காணவுள்ள அதிகாரபூர்வ அரசியல் கூட்டணி நிலைப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கூட்டணியில் பா.ம.க, த.மா.க, பாஜக, த.ம.மு.க, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளன. விரைவில் கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, அமமுகவிற்கு அமோக வரவேற்பு கிடைப்பதை போல வழிநெடுகும் ஏற்படுத்தப்பட்டு இருந்த மக்களின் அணிவகுப்பு நமக்கானது இல்லை என்று அறிந்து டிடிவி தினகரனின் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதிமுக கொடியுடன் சென்னைக்கு வந்தாலும், அவரை கட்சியில் இணைக்கும் எந்த விதமான எண்ணமும் இல்லை, அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை என்று அதிமுக தலைமை தெரிவித்தது.

ஆனால், அதிமுக - அமமுக பிரச்சனையால் தேர்தலில் வாக்குகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரியாது என்றாலும், குறைந்தபட்ச பாதிப்பு இருக்கும் என்பதால் திமுகவை எதிர்த்து தேர்தலில் வெல்ல அமமுக - அதிமுக கட்டாயம் இணைய வேண்டும், அதற்கான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறும் பாஜக தரப்பு இருதரப்பையும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அதிமுக தலைமைக்கும் இது குறித்த அழுத்தத்தையும் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

பாஜகவின் அழுத்தத்தை டிடிவி தினகரன் மறுத்து பதில் அளித்து வந்தாலும், அதிமுக - அமமுக இணைய வேண்டும் என்று பாஜக தரப்பு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமமுக - அதிமுக ஒத்துழைக்காத பட்சத்தில், அமமுகவை மொத்தமாக பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அல்லது அமமுகவை மொத்தமாக கலைத்துவிட்டு பாஜகவில் அவர்களை இணைய வைப்பது தொடர்பான திட்டமும் தீட்டப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK AMMK Join Issue May be AMMK Dissolution and Join BJP


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->