தமிழகத்தில் இன்று 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!
today 20 district school leave
தமிழகத்தில் கனமழை காரணமாக, 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் வரும் 11-ஆம் தேதி வரை மிதமான மழை முதல் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கரூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பத்தூர், மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
today 20 district school leave