10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ.19,500 முதல் 71,900 சம்பளம்... தமிழக அரசின் 8 காலி பணியிடங்கள்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தின் அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட்டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர் மற்றும் அலுவலக பணிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:
ஜீப் ஓட்டுநர் – 2 இடங்கள். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு அனுபவம் அவசியம். மாத சம்பளம் ரூ.19,500–71,900.
இரவு காவலர் – 4 இடங்கள். எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.15,700–58,100.
அலுவலக உதவியாளர் – 6 இடங்கள். 8ஆம் வகுப்பு படிப்பு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.15,700–58,100.
பதிவறை எழுத்தர் – 2 இடங்கள். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மாத சம்பளம் ரூ.15,900–58,500.

வயது வரம்பு: பொதுப்பிரிவு 21–32, பிசி/பிசிஎம்/எம்பிசி 34 வரை, எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி 37 வரை. விண்ணப்பதாரர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்தில் நிரந்தர வசிப்பவர்கள் ஆக இருக்க வேண்டும்.

தேர்வு முறை நேர்முகத் தேர்வு. தகுதி மற்றும் சான்றுகள் அப்போது சரிபார்க்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.50, பிற பிரிவினருக்கு ரூ.100. ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பப் படிவம் [www.tnrd.tn.gov.in] (http://www.tnrd.tn.gov.in) தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 30.09.2025க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Job oct 2026


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->