திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு.! முக்கிய அறிவிப்பு வெளியீடு.!
Thiruppur District Job in aavin
திருப்பூர் மாவட்ட பகுதியில், இருக்கின்ற ஒன்றியங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனமானது நடந்து வருகின்றது. இந்த வேலைக்கு ஆர்வம் இருப்பவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றி, திருப்பூர் ஒன்றிய ஆவின் பொது மேலாளர் எ.பி.நடராஜன் வெளியிட்டுள்ள தகவலின் படி, " திருப்பூர் ஒன்றியம் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஒன்றியங்களிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு 17-12-2018 முதல் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது நாளொன்றிற்கு சராசரியாக 2,05,000 லிட்டர் பால் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், 34,000 லிட்டர் பால் பாக்கெட்டாக உள்ளூர் விற்பனையாக திருப்பூர் மாவட்ட பால் நுகர்வோர்களுக்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள பால் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் சென்னை இணையத்திற்கும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே, விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், சரண்யா மேலாளர்(விற்பனை) 9080294484. டாக்டர் சுரேஷ் மேலாளர் (விற்பனை) 9865254885 என்ற எண்ணில் அலுவலரை தொடர்பு கொள்ளவும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.! முக்கிய அறிவிப்பு வெளியீடு.!

English Summary
Thiruppur District Job in aavin