கல்லூரி ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் திடீர் திருப்பம்.. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்.!!
minister ponmudi press meet about online exam
வருகின்ற பிப்ரவரி 1 லிருந்து 20 வரை ஆன்லைன் மூலமாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு மட்டும் நேரடி முறையில் நடைபெறும். இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்பட உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதனிடையே வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனால், மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா.? அல்லது நேரடியாக நடைபெறுமா.? என குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கல்லூரிகள் திறக்கபட்டாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கண்டிப்பாக ஆன்லைன் வழியாகவே நடைபெறும். மேலும், 1,3,5-வது செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
minister ponmudi press meet about online exam