தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிய ஓர் அறிய வாய்ப்பு.!
job vacancis of electricity board district managers
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிய ஓர் அறிய வாய்ப்பு.!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் ஆளுமை சங்கத்தின் மாவட்ட மேலாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு பனி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"தமிழகத்தில் காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள மின் மாவட்ட மேலாளர் பணிக்கு மின் ஆளுமையில் ஆர்வமிக்க, தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கான கல்வித் தகுதி:- பி.டெக், பி.இ ஆகியவற்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் மட்டும். பிற பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.
வயது வரம்பு:- கடந்த ஜூலை 1ம் தேதி நிலையில் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்த முறையில் அவர்களுக்கு ஓராண்டு பயிற்சிக் காலம் வழங்கப்படும். அதன் பின் வேலையை ஆய்வு செய்து கூடுதலாக இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி நீட்டிக்கப்படும்.
இந்த பணிக்கு மாதம் 23,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், https://tnegaedm.onlineregistrationform.org/TEG/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 11 ஆகும்.
English Summary
job vacancis of electricity board district managers