பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு ஆரம்பம் - எப்போது? - Seithipunal
Seithipunal


பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு ஆரம்பம் - எப்போது?

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு ஆரம்பமாகிறது. 

இந்தத் துணை கலந்தாய்வில், பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமானக் கல்லூர்களில் பதிவு செய்யலாம். 

இதேபோல், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் இந்த துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த துணை கலந்தாய்வு இன்று முதல் 8-ந் தேதி வரையில் இணையவழியில் நடத்தப்படும். 

அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில் இதுவரைக்கும் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு வருகிற 10 மற்றும் 11 உள்ளிட்ட தேதிகளில் நடத்தப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engineering supplymentary counselling starts from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->