உங்கள் குழந்தைகளின் படிக்கும் திறனை தூண்ட வேண்டுமா?
Do you want to stimulate your children's reading ability
உங்கள் குழந்தைகளின் படிக்கும் திறனை தூண்ட வேண்டுமா?
குழந்தைகளை ஒவ்வொரு நாளும் பள்ளி பாடத்தை படிக்க வைக்க அம்மாக்கள் படும் பாடு மிகவும் கஷ்டமான செயலாகவே உள்ளது. நாம் சிறுவயதில் கற்று கொடுக்கும் நல்ல பழக்கவழக்கங்கள் தான் அவர்களை பள்ளிகளில் நல்முறையில் நடந்து கொள்ள உதவுகிறது.
உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற்று செல்லும்போது, அவர்கள் படிக்க வேண்டிய பகுதிகளும் அதிகமாகிறது. எனவே, அவர்களுக்கு சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

வெளிச்சம் :
நீங்கள் முதலில் உங்கள் குழந்தை படிக்கும் அறையின் வெளிச்சத்தை கவனிக்க வேண்டும். ஏனென்றால் வெளிச்சம் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும். அதனால் அவர்கள் படிக்கும் அறையில் அதிகமாக இயற்கை வெளிச்சம்படும்படி இருந்தால் நல்லது. இயற்கை வெளிச்சத்திற்கு பதிலாக நீங்கள் செயற்கை வெளிச்சத்தை பயன்படுத்த விரும்பினால் வெள்ளை நிற விளக்கை பயன்படுத்தலாம். வெள்ளை நிற விளக்கு படிப்பதற்கு ஏற்றது.
சுவர்களின் நிறம் :
குழந்தைகள் படிக்கும் அறைக்கு மீடியமான நிறங்களை தேர்ந்தெடுங்கள். அதிகம் கருப்பான மற்றும் பளிச்சென்று தெரியும் வண்ணங்கள் வேண்டாம். அழகான உற்சாகமூட்டும் பொம்மைகள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் வரையலாம். அது அவர்களுக்கு மனதை புத்துணர்ச்சி அடைய செய்யும்.
நூலகம் அமைத்தல் :
உங்கள் குழந்தை வளர வளர அவர்களின் படிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்கு அவர்கள் படிக்கும் விதத்தில் ஒரு நல்ல நூலகத்தை அமைக்க வேண்டும். சிறுவயதில் அவர்கள் கற்கும் நிறைய விஷயங்கள் தான் பெரியவர்கள் ஆனதும் முன்னேற உதவுகிறது. ஏனெனில் புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, குழந்தைகளுக்கு பிடித்தமான நிறைய வகையான புத்தகங்களை கொண்டு ஒரு நூலகத்தை அமைத்து கொடுங்கள். அது அவர்களின் படிக்கும் திறனை அதிகப்படுத்தும்.
எலக்ட்ரானிக் பொருட்களை அவர்களிடம் இருந்து தள்ளி வையுங்கள் :
உங்கள் குழந்தைகள் அறையில் இருந்து கணினி, மடிக்கணினி போன்றவற்றை எடுத்து விடுங்கள். மேலும், உங்கள் குழந்தைகள் படிக்கும் அறையில் குறைந்த அளவு எலக்ட்ரானிக் பிளக் பாயிண்ட் வையுங்கள். உங்கள் குழந்தைகள் கைபேசி பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அது உங்கள் குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கும்.
English Summary
Do you want to stimulate your children's reading ability