இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுவதற்கான அறிவிப்பாணையை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.

அதில், "குரூப் 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டது. அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 673 ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும்" என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் இடம் -  சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

கலந்தாய்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 25 மற்றும்  26

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு 27ம்தேதி சென்னையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

counselling of junior assistant job in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->