வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க மறந்துடீங்களா? இதோ உங்களுக்குத்தான்.! - Seithipunal
Seithipunal


வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க மறந்துடீங்களா? இதோ உங்களுக்குத்தான்.!

வங்கி பணியாளர் தேர்வாணையம் மொத்தம் 11 பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு துறைகளில் 3049 பி.ஓ மற்றும் 1402 சிறப்பு அதிகாரி என்று மொத்தம் 4,451 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. 

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆக.1 முதல் 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி இந்த காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

அதனால், தற்போது வங்கி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆக.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தை அணுகலாம். 

இந்தத் தேர்வுகள் முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank jobs apply date extened


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->