108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு!
108 ambulance job tamilnadu
108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டி.எம்.எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டு படிப்பு), அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி மற்றும் செவிலியப் பணிகளைச் சார்ந்த சோதனைகள் மூலம் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
ஓட்டுநர் பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது 24 முதல் 35க்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையக் கூடாது. இலகுரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்; அதற்கான அனுபவம் குறைந்தது 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும், பேஜ் வாகன உரிமம் பெற்றிருப்பதோடு, அதில் குறைந்தது ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பச் சோதனை, மனிதவளத் துறை நேர்முகம், கண் பார்வை மற்றும் மருத்துவ சோதனைகள், சாலை விதி தொடர்பான தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு பணி வழங்கப்படும்.
இரு பணிகளுக்கும் மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி, உரிமம் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 73388 94971, 73977 24813, 91500 84186 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
108 ambulance job tamilnadu