சுபநிகழ்ச்சியில் முகூர்த்தக்கால் நட்டு வைப்பதற்கு பின் இப்படி ஒரு வியப்பூட்டும் வரலாறா.?!
Mugoosthakkal Function history in tamil
கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த கால் அல்லது பந்த கால் நடக்கூடிய சுப நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது சம்பவம் நடைபெறுவதை உறுதிப்படுத்தக் கூடிய அடையாளமாகும்.
சுப நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். பந்தல்கால் நடுவதற்கு அதிகப்படியாக மூங்கில் மரங்களை தான் பயன்படுத்துகின்றனர். நன்றாக அந்த மூங்கில் மரத்தை சுத்தம் செய்து கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு பூக்களால் அலங்காரம் செய்வார்கள்.

அதன் பின் வெள்ளைத் துணியில் செப்பு காசை வைத்து முடிந்து அதை மூங்கிலில் வைத்து கட்டுவார்கள். அத்துடன் பந்தல்கால் நடுகின்ற குழியில் நவதானியத்தை கொட்டி பால் வார்த்து உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடுவார்கள். ஈசானிய மூலை என்று கூறப்படும் வடகிழக்கு மூலையில் தான் இந்த பந்தல் காலை நடுவார்கள். இது சிவாம்சம் கொண்ட திசை என்று நம்பப்படுகிறது.
இந்த முதல் பந்தல்காலை நல்ல நேரத்தில் நட்ட பிறகு தான் மற்ற பகுதிகளில் பிற கால்களை நட்டு பந்தல் அமைப்பார்கள். இது பந்தலை மட்டும் தாங்கி நிற்காமல் சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கப்படும் விசேஷம் இறுதிவரை சுகமாக முடிய வேண்டும் என்று இறைவன் ஆசியுடன் இறுதி வரை காரியங்களை தாங்கி நிற்கக்கூடிய பலத்தை அனைவருக்கும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மூங்கில் மரத்தைப் போல செழித்து உயர வேண்டும் என்று மணமக்களுக்கு ஆசீர்வதிக்கக்கூடிய சடங்காகும்.

திருமண விழாக்களில் பண்டைய காலத்தில் முதல் அழைப்பிதழ் அரசனுக்கு தான் வழங்கப்படும். ஆனால் அரசனுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் எல்லோருடைய திருமணத்திற்கும் செல்ல முடியாது. அப்படிப்பட்ட இடங்களுக்கு தனது ஆணைக்கோலை அரசன் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அந்த அரசாணை கோல் வந்துவிட்டால் திருமணம் அரசனால் அங்கீகரிக்கப்பட்டதாக அர்த்தமாம். இதை பின்பற்றி தான் பின்நாளில் முகூர்த்த கால் நடக்கூடிய வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பந்தல்கால் கண் திருஷ்டியை போக்கவும் பயன்படுகிறது.
English Summary
Mugoosthakkal Function history in tamil