உலகத் தமிழர்களை திகைப்பில் ஆழ்த்திய டாக்டர் ராமதாஸ்! அரசியலில் இவர் ஒரு மாதிரி தான்!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தை மாதத்தின் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முதன்மையான பண்டிகையான பொங்கல் பண்டிகை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய இல்லத்தில் வருடந்தோறும் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முறையைப் பின்பற்றி கொண்டாடி வருகிறார். 

இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்டிகை என்பதை கொண்டாட்ட முறைகளின் மூலம் உலகிற்கு கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புதுமையான செயலினை பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பின்பற்றி இயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பொங்கல் மேடையினை தன்னுடைய இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்த வருடம் மாட்டு வண்டியும், அதில் மாடுகளை பூட்டி ஓடுவதுபோலவும் பன்னீர் கரும்புகளை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வடிவமைப்பு பார்ப்போர் அனைவரையும் பரவசத்தியில் ஆழ்த்தியது. முதலில் இந்த வடிவமைப்பு எங்க உள்ளது என தெரியாமல் பரவ பலரும் விசாரித்து கொண்டிருக்கையில், அந்த வடிவமைப்பின் முன்னே தோன்றிய பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி MP உலக தமிழர்களுக்கு தன்னுடைய பொங்கல் வாழ்த்தை தெரிவித்து பதிவிட்ட பிறகு தான் அந்த வடிவமைப்பு தைலாபுரம் தோட்டத்தில் உருவாக்கப்பட்டது தெரிய வந்தது. 

இதே போல பன்னீர்க்கரும்புகளை கொண்டு பொங்கல் பானை, குடில், மேடை முதலியவற்றை கடந்த வருடங்களில் அவர்கள் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலங்கள் எவ்வளவு மாறினாலும், நாகரிகம் என நகரத்திலே சிக்குண்டு வீட்டு சமையலறையில் எரிவாயு அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எந்த நிலைக்கு சென்றாலும் நம்முடைய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் செய்து காட்டியுள்ளார். 

இதனைவிட சிறப்பாக ஒவ்வொரு வருடமும் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் யார் எங்கு இருந்தாலும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தைலாபுரத்தில் கூடி தைத் திருநாளை கொண்டாட வேண்டுமென்பது டாக்டர் ராமதாஸின் விருப்பமாக இருந்து வருகிறது. தனது குடும்பத்தினர் அனைவரும் கூடி கடந்த 20 வருடமாக கொண்டாடிய தைக்கூடல் நிகழ்ச்சியானது ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த தைக்கூடல் நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தமிழர் கலைநிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது விருந்தினர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dr ramadoss celebrate pongal in thailapuram


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->