ரெயிலை கடத்துவேன்- போலீசாரை அலறவிட்ட வாலிபர்!
I will hijack the train - a young man made the police panic
வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக போலீஸ்க்கு போண் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.அப்போது மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே, ஒருவர் 100 மற்றும் 108 அவசர உதவி எண்களுக்கு தொலைபேசி செய்து,ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தப்போகிறேன்"என கூறி அழைப்பை துண்டித்தார்.
தகவல் அறிந்த மொரப்பூர் ரெயில்வே போலீசார், சைபர் கிரைம் பிரிவுடன் இணைந்து மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கண்டறிந்தனர்.சந்தேகநபர், அதே ரெயிலில், முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் பயணித்தது தெரியவந்தது.
உடனடியாக ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டு, போலீசார் தயார் நிலையில் காத்திருந்தனர்.ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்ததும், பொதுப் பெட்டியில் பயணித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.சபரீசன் கூறுகையில்,“நான் 2021-ல் மின் வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரிந்தேன். தற்போது வேலை இல்லாத நிலையில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க மொரப்பூர் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் தான் ரெயிலை கடத்தப்போகிறேன் என்று கூறினேன்” என போலீசாரிடம் தெரிவித்தார்.
சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்து,கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார்,சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம், பயணிகளிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
English Summary
I will hijack the train - a young man made the police panic