விராட் கோலி போல் இல்லை: 'அணியை அமைதியாக வழி நடத்துவதே சிறந்தது'. சுப்மன் கில்லை பாராட்டியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர்..!
Former England player praises Shubman Gill for not being like Virat Kohli
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 05 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரண்டு அணிகள் இடையிலான 02-வது போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 02-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 06 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
-p5ets.png)
இங்கிலாந்து அணி 02-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில்அபாரமாக வெற்றிப் பெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 06 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 02-வது இன்னிங்சில் சதமும் அடித்த அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த டெஸ்ட் போட்டியின் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அப்போது, விராட் கோலி, ரோகித் சர்மா போல இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் சுப்மன் கில் தடுமாறுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் விமர்சித்து இருந்தார். 02-வது தொடரில்இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு முதல் போட்டியில் விமர்சித்த நாசர் உசேன், சுப்மன் கில்லை பாராட்டியுள்ளார்.
-x9ew2.png)
இது குறித்து பேசிய அவர் குறிப்பிடுகையில், "ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம் என்று தான் கருதவில்லை வேண்டும், தோல்வியை சந்திக்கும் போது கேப்டன் காணாமல் போய்விட்டார் என்று விமர்சிப்பதும், வெற்றி பெறும்போது சிறந்த கேப்டன் என்று பாராட்டுவதும் எளிது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதல் போட்டியில் வர்ணனையாளர் அறையிலிருந்து பார்க்கும்போது அவருக்கு நிறைய வீரர்கள் உள்ளீடுகளைக் கொடுத்தார்கள். அதனால் யார் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார்..? என்ற கேள்வி எழுந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால்,02-வது போட்டியில் கேமரா அடிக்கடி அவரை நோக்கிச் சென்றது, அப்போது அவர் மைதானத்தில் பீல்டர்களை சிறப்பாக நகர்த்தி தலைமைத் தாங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
-j84e6.png)
குறிப்பாக, ரிஷப் பண்ட், ராகுல் உதவி செய்தாலும் கில் அணியை முழுமையாக கட்டுப்படுத்தியது தெரிந்தது. அவர் எப்போதும் அமைதியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அவர் பொறுமையாக உள்ளதால் காலத்தில், பொறுமையும் அமைதியும் கொண்ட அவர் விராட் கோலியை போன்று இருக்க போவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மொத்த இந்தியாவும் பார்க்கும் அணியை அமைதியுடன் வழி நடத்துவதே சிறந்தது. என்றும், அவர் நாம் செய்ய விரும்பாத சில நுட்பமான விஷயங்களைச் செய்தார் என்றும், ஆகாஷ் தீப் இந்த முனையில் அழகாக பந்து வீசினார் எனவும், அவரை அடுத்த நாள் காலையில் அவர் அந்தப் பக்கம் பவுலிங் செய்ய வைத்தமை நன்றாக வேலை செய்தது என்று குரியப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் அதுவும் இந்த ஆட்டத்தில் கில் செய்த தந்திரோபாய விஷயங்கள் உண்மையில் வேலை செய்தன. என்றும் அவரது முதன்மை வேலையான பேட்டிங்கிலும் அவர் ரன்களை குவித்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
English Summary
Former England player praises Shubman Gill for not being like Virat Kohli