67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்: ஹிமாச்சலில் நிலச்சரிவில் நெகிழ்ச்சி சம்பவம்..!
Pet dog saves 67 lives in landslide in Himachal
ஹிமாச்சலப் பிரதேசம் கடந்த 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்கு மண்டியில் தொடர்ந்து பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்யும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் தப்பிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கனமழை காரணமாக மண்டி, சிம்லா, சிர்மாவுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
-3e6f5.png)
கனமழையின் போது மண்டியில் உள்ள, சியாத்தி கிராமத்தில், நள்ளிரவில் திடீரென நாய் ஒன்று குரைத்துள்ளது. இதனால் உரிமையாளர்வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வந்துள்ளது. பதறிய அவர், மொத்த கிராமத்தினரையும் எச்சரிக்கை செய்துள்ளார். உடனடியாக அங்கிருந்த அனைவரும் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதனால் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் நாய் குரைத்ததால், 67 பேர் உயிர் பிழைக்க முடிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, நாயின் உரிமையாளர் நரேந்திரா கூறியதாவது: தனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென சத்தமாக குரைக்கத் தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் ஊளையிட்டது, மழை தொடர்ந்து பெய்தது.
-tb5f8.png)
இவ்வாறு குரைக்கும் சத்தத்தை கேட்டு நான் விழித்தேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது வீட்டின் சுவரில் ஒரு பெரிய விரிசலைக் கண்டதாகவும், அப்போது வீட்டிற்கு தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியதால் உடனே நாயுடன் கீழே ஓடி அனைவரையும் எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும், தற்போது கிராமத்தில் ஐந்து வீடுகளைத் தவிர மற்ற வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர்கள் கிராமத்தில் உள்ள தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pet dog saves 67 lives in landslide in Himachal