மீளா துயரம்! உயிரிழந்த பிஞ்சுகளின் இறப்பிலும் துயரத்திலும் பள்ளி கல்வித்துறை பங்கெடுத்துக் கொள்ளும்! - அன்பில் மகேஷ்
school education department share death and grief deceased children Anbil Mahesh
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'அன்பில் மகேஷ் பொய்யாமொழி' அவர்கள் கடலூர் பள்ளி வேன் மீது ரெயில்மோதிய விபத்து குறித்து தந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அன்பில் மகேஷ்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கெடுத்துக்கொள்கிறது.காயமடைந்த மாணவர்கள் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்ய காத்திருக்கிறோம்.
உயிரிழந்த பிஞ்சுகளின் பெற்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், சக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.இந்த விபத்து செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மக்களின் மனவேதனையை கண்டு வருகிறது.
English Summary
school education department share death and grief deceased children Anbil Mahesh