முன்னாள் குடியரசுத் தலைவருக்கு புதிய சிலை..அமைச்சர் நாசர் ஆய்வு!
New statue for the former president Minister Nassars inspection
டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-b2r8p.JPG)
இதேபோல திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சின்ன காவனம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகளை வழங்கினார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) என்.ஜெ.பால்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்(பொ) கோமதி, உதவி இயக்குநர் வெ.டில்லிகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
New statue for the former president Minister Nassars inspection