"டி.சி" தராததால் நேர்ந்த விபரீதம்! 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை...! - பள்ளியின் பிடிவாதத்தால் பறிபோன உயிர்!
tragedy occurred because tc not given 8th grade student committed suicide life lost due school stubbornness
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த தேஜஸ் என்ற மாணவனின் துயரமான முடிவு, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளித் தேர்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தேஜஸின் பெற்றோர் அவரை வேறு பள்ளியில் சேர்க்கும் நோக்கில் மாற்றுச் சான்றிதழ் கோரி பள்ளி நிர்வாகத்தை அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதினால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தேஜஸ், திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகனின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவனின் பெற்றோர் தெரிவிக்கையில், மாற்றுச் சான்றிதழ் கோரியும் அதை வழங்காமல் ஆசிரியர்கள் தொடர்ந்து மனஅழுத்தம் ஏற்படுத்தியதாகவும், அதனால் விரக்தியடைந்த தேஜஸ் இந்த கடுமையான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தேஜஸின் பெற்றோர் பெருந்தல்மன்னா காாவலர்களிடம் ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காாவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாற்றுச் சான்றிதழ் வழங்காத விவகாரம்தான் மாணவனின் உயிரிழப்புக்கு காரணமா அல்லது வேறு பின்னணி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tragedy occurred because tc not given 8th grade student committed suicide life lost due school stubbornness