தாயுடன் தொடர்பு சந்தேகம்...நண்பனை கொன்ற 17 வயது சிறுவன்...! - ஜல்னாவில் அதிர்ச்சி சம்பவம்
Suspected connection mother 17 year old boy kills friend Shocking incident Jalna
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்த 25 வயதான நிகில் வாக்மரே மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இடையே நெருக்கமான நட்பு இருந்து வந்தது. சமீபத்தில் பிளஸ்-2 தேர்வை எழுதி முடித்திருந்த அந்த சிறுவன், தனது தாயுடன் நிகிலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நீண்டநாளாக சந்தேகத்தில் தவித்துவந்தான்.

நிகில் அடிக்கடி செல்போன் மூலம் தனது தாயிடம் தொடர்பு கொண்டு வந்ததும், அந்த சிறுவனின் மனக்கசப்பை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது, போதையில் மயங்கிய நிகிலை பயன்படுத்தி, சிறுவன் முன்கூட்டியே வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக தாக்கினான். இந்த தாக்குதலில் நிகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற காவலர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேசமயம், சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற சிறுவனை விரைவாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Suspected connection mother 17 year old boy kills friend Shocking incident Jalna