பிரபல யூடியூபர் இர்ஃபானின்  கார் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.. போலீஸார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


இர்பான் வியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் இர்பான். இவர் எடுத்து வெளியிடும் வீடியோக்களுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவருடைய சேனலை யூட்யூபில் 3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் உணவு என்ன என்பதை தேடித் தேடி ரிவ்யூ செய்து வருகிறார்.

தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள ஸ்பெஷலான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். தற்போது அதையும் தாண்டி அரசியல் மற்றும் பிரபலங்களுடன் பேட்டி எடுத்து வருகிறார்.

இதில் சமீபத்தில் இர்பானுக்கு கடந்த மே 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இர்ஃபானின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டிய அசாருதீன் என்பவரிடம் மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youtuber Irfan car accident women death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->