நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்.! தோழி ஸ்பாட் அவுட்.!
yashika anand in car accident
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் சென்ற கார் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியதில், அவருடன் சென்ற அவரது தோழி பவானி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\
English Summary
yashika anand in car accident