எல்லை விவகாரம்: சீனாவுக்கு இந்தியா பதிலடி!
Boundary issue India counters China
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. சிலநேரங்களில் இந்த எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.
அருணாசலபிரதேசத்தை, 'ஜாங்னான்' என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அதனை தொடர்ந்து 2017-2021-, 2023-ம் ஆண்டு என மொத்தம் 32 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது.இந்தநிலையில் இந்தியாவை சீண்டி பார்க்கும் வகையில், தற்போது மீண்டும் அருணாசல பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:, "இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Boundary issue India counters China