தவெக விஜய்க்கு அதிர்ச்சி: நேரில் ஆறுதல் சொல்ல வராததால் ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்..!
The victims family returned Rs. 20 lakhs as TVK Vijay did not appear in person
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை நடத்தினர். அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி,41 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தினர் அவர் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துக்கு த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தலைவர் விஜய் வழங்கிய பணத்தைகோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாததால் அதிருப்தியில் அவர்கள் குறித்த பணத்தை திருப்பியனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
The victims family returned Rs. 20 lakhs as TVK Vijay did not appear in person